கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து சேவை இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நீண்ட காலத்தின் பின் பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ரட்ணம் அமீர் கலந்து கொண்டு குறித்த பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
நீண்ட காலமாக மக்கள் தமது கிராமத்திற்கான பேருந்து சேவையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தமைக்கமைய, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த தனியார் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்டாவளை அமைப்பாளர், பாடசாலையின் அதிபர் ,பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கண்டாவளை மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு. கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து சேவை இன்றி அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், நீண்ட காலத்தின் பின் பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ரட்ணம் அமீர் கலந்து கொண்டு குறித்த பேருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.நீண்ட காலமாக மக்கள் தமது கிராமத்திற்கான பேருந்து சேவையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தமைக்கமைய, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த தனியார் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஆரம்ப நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்டாவளை அமைப்பாளர், பாடசாலையின் அதிபர் ,பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.