• Apr 14 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களால் விழிப்புணர்வு வீதி ஊர்வலம்

Chithra / Oct 1st 2025, 10:32 am
image

 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த ஊர்வலமானது கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பமாகி தோப்பூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இதன்போது மாணவர்கள் சுலோகங்களை ஏந்தி சிறுவர் உரிமை தொடர்பான கோசங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.

இவ்வருடத்திற்கான சிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பை போசியுங்கள்" எனும் தொணிப் பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் " தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்" என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களால் விழிப்புணர்வு வீதி ஊர்வலம்  சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை, தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது.குறித்த ஊர்வலமானது கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பமாகி தோப்பூர் பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.இதன்போது மாணவர்கள் சுலோகங்களை ஏந்தி சிறுவர் உரிமை தொடர்பான கோசங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.இவ்வருடத்திற்கான சிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பை போசியுங்கள்" எனும் தொணிப் பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் " தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்" என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement