உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடிய வேளையில் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மோன்டோனா நகரத்திலுள்ள ஒரு விடுதியில் சுற்றுலாப்பயணிகள் பலரும் நேற்று புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். அதிகாலை 1.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ முழுவதுமாக பரவியதில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் எனவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதலால் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இது எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய வாணவெடிகள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் முழுவதுமாக மூடுபட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, கிரான்ஸ் மோன்டோனா நகரம் முழுவதும் விமானங்கள் எதுவும் பறக்கக் கூடாத 'நோ - ஃப்ளை' அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தீ முழுவதும் பரவியதில் தமது உயிரைக்காக்க அங்கிருந்தவர்கள் அலறியோடும் காட்சி வெளிவந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் திடீரென பற்றிய தீ ; 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடிய வேளையில் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மோன்டோனா நகரத்திலுள்ள ஒரு விடுதியில் சுற்றுலாப்பயணிகள் பலரும் நேற்று புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். அதிகாலை 1.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ முழுவதுமாக பரவியதில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் எனவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதலால் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இது எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய வாணவெடிகள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் முழுவதுமாக மூடுபட்டிருக்கிறது.அதுமட்டுமின்றி, கிரான்ஸ் மோன்டோனா நகரம் முழுவதும் விமானங்கள் எதுவும் பறக்கக் கூடாத 'நோ - ஃப்ளை' அமல்படுத்தப்பட்டு உள்ளது.தீ முழுவதும் பரவியதில் தமது உயிரைக்காக்க அங்கிருந்தவர்கள் அலறியோடும் காட்சி வெளிவந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.