மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அங்குள்ள இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்தும் தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் 7 ஆயிரம் பேர் வரையான இலங்கையர்கள் உள்ளார்கள் என்றும், இந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதிவரை 1116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது அங்கு இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக லெபனானுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில் பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை சீராகும் வரை தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.மேலும், அங்குள்ள இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்தும் தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.லெபனானில் 7 ஆயிரம் பேர் வரையான இலங்கையர்கள் உள்ளார்கள் என்றும், இந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதிவரை 1116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனினும் தற்போது அங்கு இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக லெபனானுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில் பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலைமை சீராகும் வரை தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.