• Mar 21 2025

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைப்பு..!

Sharmi / Mar 21st 2025, 12:44 pm
image

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று(21) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம். 

கல்வி அமைச்சினால் கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைப்பு. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று(21) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம்.  கல்வி அமைச்சினால் கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement