• Aug 25 2026

யாழ். போதனாவிற்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

Chithra / Aug 25th 2026, 3:00 pm
image


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் இன்று அதிகாலை கொக்காவில் பகுதியில் பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் மருந்துகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் கொக்காவில் பகுதியில் பழுதடைந்த நிலையில், பாதையை விட்டு விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, அவற்றை மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த இரு ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 


யாழ். போதனாவிற்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் இன்று அதிகாலை கொக்காவில் பகுதியில் பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் மருந்துகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் கொக்காவில் பகுதியில் பழுதடைந்த நிலையில், பாதையை விட்டு விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, அவற்றை மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த இரு ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement