• May 24 2026

கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை; வருமானத்தை இழந்து கண்ணீர் விடும் பெண்ணின் கோரிக்கை

Chithra / Dec 25th 2025, 8:30 am
image

கந்தளாய், பேரமடு பிரதேசத்தில் நேற்று அதிகாலை ஊடுருவிய காட்டு யானை ஒன்று, அங்கிருந்த கடை  ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


யானையின் தாக்குதலுக்கு உள்ளான கடையின் உரிமையாளர் ஒரு பெண் என்பதும், அவர் தனது கணவர் இல்லாத நிலையில் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பல பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில், தனது வாழ்வாதாரத்திற்காக சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு இந்தக் கடையை அவர் நடத்தி வந்துள்ளார்.


நேற்று  அதிகாலை திடீரென கடைக்குள் புகுந்த யானை, கடையின் சுவர்களை உடைத்து உள்ளே இருந்த அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தளபாடங்களைச் சேதப்படுத்தியுள்ளது. 


இதனால் தனது ஒரேயொரு வருமான மார்க்கத்தை இழந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தமக்கு யாராவது உதவி செய்ய முன்வருமாறும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இப்பகுதியில் தொடர்ந்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை; வருமானத்தை இழந்து கண்ணீர் விடும் பெண்ணின் கோரிக்கை கந்தளாய், பேரமடு பிரதேசத்தில் நேற்று அதிகாலை ஊடுருவிய காட்டு யானை ஒன்று, அங்கிருந்த கடை  ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.யானையின் தாக்குதலுக்கு உள்ளான கடையின் உரிமையாளர் ஒரு பெண் என்பதும், அவர் தனது கணவர் இல்லாத நிலையில் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில், தனது வாழ்வாதாரத்திற்காக சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு இந்தக் கடையை அவர் நடத்தி வந்துள்ளார்.நேற்று  அதிகாலை திடீரென கடைக்குள் புகுந்த யானை, கடையின் சுவர்களை உடைத்து உள்ளே இருந்த அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தளபாடங்களைச் சேதப்படுத்தியுள்ளது. இதனால் தனது ஒரேயொரு வருமான மார்க்கத்தை இழந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தமக்கு யாராவது உதவி செய்ய முன்வருமாறும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இப்பகுதியில் தொடர்ந்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement