• Jul 27 2025

கொக்கிளாய் கடலில் இளைஞன் மாயம்! இளைஞனின் படத்திற்கு விளக்கு வைத்த குடும்பம்!

shanuja / Jul 26th 2025, 6:21 pm
image

கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 


முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த அருண் என்னும் 23 வயதான இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 


கொக்கிளாய் கடலிற்கு நேற்று (25) அதிகாலை 4.30 மணியளவில் கடற்றொழிலுக்கு 5 பேர் சென்றுள்ளனர். 

அதில் ஒரு இளைஞனே காணாமல் போயுள்ளார். 


தொழிலுக்கு கடலில்  சென்றவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் தற்போது வரை கிராம மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இளைஞனைக் காணவில்லை என்று கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை அவ் இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என்று காணாமல் போன இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.


அத்துடன் காணாமல் போன இளைஞனின் படம் வீட்டில் வைக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொக்கிளாய் கடலில் இளைஞன் மாயம் இளைஞனின் படத்திற்கு விளக்கு வைத்த குடும்பம் கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த அருண் என்னும் 23 வயதான இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கொக்கிளாய் கடலிற்கு நேற்று (25) அதிகாலை 4.30 மணியளவில் கடற்றொழிலுக்கு 5 பேர் சென்றுள்ளனர். அதில் ஒரு இளைஞனே காணாமல் போயுள்ளார். தொழிலுக்கு கடலில்  சென்றவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் தற்போது வரை கிராம மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இளைஞனைக் காணவில்லை என்று கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை அவ் இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என்று காணாமல் போன இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.அத்துடன் காணாமல் போன இளைஞனின் படம் வீட்டில் வைக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement