• Sep 17 2024

நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவு - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Tharun / Jun 9th 2024, 3:56 pm
image

Advertisement

தற்போது நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவு - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை தற்போது நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement