• Apr 15 2026

புத்தாண்டு விளையாட்டில் ஏற்படும் விபத்துக்கள் - பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு

Chithra / Apr 9th 2026, 10:25 am
image

சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் போது விபத்துக்கள் மற்றும் பாரிய மருத்துவ சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 


தலையணைச் சமர், முட்டி உடைத்தல், மரதன் ஓட்டம், சைக்கிள் பந்தயம், நீச்சல் போட்டிகள், படகோட்டம், கரண்டியில் எலுமிச்சை வைத்து ஓடுதல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் மற்றும் சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகள் குறித்து இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 


இந்த விளையாட்டுக்களில் உள்ள போட்டித்தன்மை மற்றும் உற்சாகத்திற்கு அப்பால், விபத்துக்கள் மற்றும் ஆபத்தான மருத்துவ நிலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 


எனவே, போட்டிகளில் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தாண்டு விளையாட்டில் ஏற்படும் விபத்துக்கள் - பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் போது விபத்துக்கள் மற்றும் பாரிய மருத்துவ சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தலையணைச் சமர், முட்டி உடைத்தல், மரதன் ஓட்டம், சைக்கிள் பந்தயம், நீச்சல் போட்டிகள், படகோட்டம், கரண்டியில் எலுமிச்சை வைத்து ஓடுதல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் மற்றும் சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகள் குறித்து இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுக்களில் உள்ள போட்டித்தன்மை மற்றும் உற்சாகத்திற்கு அப்பால், விபத்துக்கள் மற்றும் ஆபத்தான மருத்துவ நிலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே, போட்டிகளில் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement