• Oct 22 2024

இலங்கையில் குவியும் கடவுச்சீட்டுக்கள்; இனி தட்டுப்பாட்டுக்கு இடமில்லை! - அரசு அறிவிப்பு

Chithra / Oct 22nd 2024, 12:52 pm
image

Advertisement


நாட்டில் இந்த வாரத்துக்கு தேவையான 50,000 கடவுச்சீட்டுக்கள் இருப்பில் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.

7500 கடவுச்சீட்டுக்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததுடன், மேலும் 42,000 கடவுச்சீட்டுக்கள் நாளை (23) நாட்டை வந்தடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நவம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

எனவே, கடவுச்சீட்டு விடயத்தில் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

7,50,000 கடவுச்சீட்டுக்கள் பகுதியளவில் நாட்டை வந்தடையும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினனார்.

இந்த வாரத்துடன் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடவுச்சீட்டுக்கான வரிசையும் இந்த வாரத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்படும்.  என்றும் அவர் தெரிவித்தார்.   

இலங்கையில் குவியும் கடவுச்சீட்டுக்கள்; இனி தட்டுப்பாட்டுக்கு இடமில்லை - அரசு அறிவிப்பு நாட்டில் இந்த வாரத்துக்கு தேவையான 50,000 கடவுச்சீட்டுக்கள் இருப்பில் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.7500 கடவுச்சீட்டுக்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததுடன், மேலும் 42,000 கடவுச்சீட்டுக்கள் நாளை (23) நாட்டை வந்தடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நவம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, கடவுச்சீட்டு விடயத்தில் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.7,50,000 கடவுச்சீட்டுக்கள் பகுதியளவில் நாட்டை வந்தடையும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினனார்.இந்த வாரத்துடன் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடவுச்சீட்டுக்கான வரிசையும் இந்த வாரத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்படும்.  என்றும் அவர் தெரிவித்தார்.   

Advertisement

Advertisement

Advertisement