பிரித்தானியாவில் நடந்த அமிலத் தாக்குதலில் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிடன் ரயில் நிலையத்தில்v(Surbiton train station) வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான அமிலத் தாக்குதல் தொடர்பாக 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4:20 மணியளவில் அரங்கேறியுள்ளது.
அப்போது இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையினர் கண்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை அணுகியபோது, அவர்கள் அமிலத் தன்மை கொண்ட பொருளால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு அதிகாரிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக, இரண்டு பதின்ம வயது சந்தேக நபர்களின் அடையாளங்களை தற்போது வெளியிடப்படவில்லை.
அவர்கள் திங்களன்று விம்பிள்டன் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிகள் மீது அமிலத் தாக்குதல்: 2 சிறுவர்கள் கைது பிரித்தானியாவில் நடந்த அமிலத் தாக்குதலில் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிடன் ரயில் நிலையத்தில்v(Surbiton train station) வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான அமிலத் தாக்குதல் தொடர்பாக 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4:20 மணியளவில் அரங்கேறியுள்ளது.அப்போது இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையினர் கண்டனர்.இதையடுத்து காவல்துறையினர் அவர்களை அணுகியபோது, அவர்கள் அமிலத் தன்மை கொண்ட பொருளால் தாக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு அதிகாரிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக, இரண்டு பதின்ம வயது சந்தேக நபர்களின் அடையாளங்களை தற்போது வெளியிடப்படவில்லை.அவர்கள் திங்களன்று விம்பிள்டன் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.