• Nov 23 2024

தேர்தல் தொடர்ப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!samugammedia

mathuri / Feb 25th 2024, 5:47 am
image

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தன்னிடம் இல்லை எனவும் இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் "நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளது. அத்துடன் மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசு செயற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் அவர்  தெரிவித்தார்.


தேர்தல் தொடர்ப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.samugammedia ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தன்னிடம் இல்லை எனவும் இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் "நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளது. அத்துடன் மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசு செயற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் அவர்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement