• Sep 16 2026

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை

Aathira / Sep 16th 2026, 7:17 am
image

வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம் பிரதேச மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  நேற்றைய தினம் கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பார்வையிட்டார்.

இதன்போது, சுமார் 40 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத 8 கிலோமீற்றர் நீளமான கள்ளிக்குளம் பிரதான வீதி தொடர்பில் மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்குச் சொந்தமான இந்த வீதியை சுமார் 800 குடும்பங்கள் பயன்படுத்தி வருவதுடன், இரண்டு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் இது முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

வீதி நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாததால், போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநர், கள்ளிக்குளம் பிரதான வீதியை இரண்டு கட்டங்களாகப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை பிரதேச சபைக்கு ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வீதி சீரற்ற நிலையில் காணப்படுவதன் காரணமாக முறையான பேருந்துச் சேவையும் இடம்பெறாத நிலைமை தொடர்பிலும் மக்கள் தெரிவித்தனர். இதனுடன், யானை வேலி அமைத்துத் தர வேண்டியதன் அவசியமும் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, தங்களது வயற்காணிகளை வனவளத் திணைக்களம் எல்லைக் கற்களை நட்டு ஆக்கிரமித்துள்ளதாகவும், தமது வாழ்வாதாரத்துக்காக நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளிலும் அண்மைக்காலத்தில் தலையீடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

தங்களுக்கு உரிய காணி ஆவணங்கள் இல்லாத நிலை, புதிய குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படாமை மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் தேவை உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும், கிராமத்தில் வசிக்கும் 18 மாற்றுத் திறனாளிகள் இணைந்து சுயதொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கான கட்டட வசதி இல்லாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் சனசமூக நிலையக் கட்டடத்தைப் புனரமைத்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். இதனை சாதகமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், வீடுகளுக்கான மின் இணைப்புகளை மாற்றித் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

மக்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், ஒவ்வொரு பிரச்சினையும் உரிய வகையில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். 

மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் அழைத்து வந்து, மக்களின் பிரச்சினைகளை களத்தில் வைத்து ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம் பிரதேச மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  நேற்றைய தினம் கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பார்வையிட்டார்.இதன்போது, சுமார் 40 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத 8 கிலோமீற்றர் நீளமான கள்ளிக்குளம் பிரதான வீதி தொடர்பில் மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்குச் சொந்தமான இந்த வீதியை சுமார் 800 குடும்பங்கள் பயன்படுத்தி வருவதுடன், இரண்டு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் இது முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.வீதி நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாததால், போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநர், கள்ளிக்குளம் பிரதான வீதியை இரண்டு கட்டங்களாகப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை பிரதேச சபைக்கு ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.வீதி சீரற்ற நிலையில் காணப்படுவதன் காரணமாக முறையான பேருந்துச் சேவையும் இடம்பெறாத நிலைமை தொடர்பிலும் மக்கள் தெரிவித்தனர். இதனுடன், யானை வேலி அமைத்துத் தர வேண்டியதன் அவசியமும் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டது.இதேவேளை, தங்களது வயற்காணிகளை வனவளத் திணைக்களம் எல்லைக் கற்களை நட்டு ஆக்கிரமித்துள்ளதாகவும், தமது வாழ்வாதாரத்துக்காக நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளிலும் அண்மைக்காலத்தில் தலையீடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். தங்களுக்கு உரிய காணி ஆவணங்கள் இல்லாத நிலை, புதிய குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படாமை மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் தேவை உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.மேலும், கிராமத்தில் வசிக்கும் 18 மாற்றுத் திறனாளிகள் இணைந்து சுயதொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கான கட்டட வசதி இல்லாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் சனசமூக நிலையக் கட்டடத்தைப் புனரமைத்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். இதனை சாதகமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.அத்துடன், வீடுகளுக்கான மின் இணைப்புகளை மாற்றித் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.மக்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், ஒவ்வொரு பிரச்சினையும் உரிய வகையில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் அழைத்து வந்து, மக்களின் பிரச்சினைகளை களத்தில் வைத்து ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement