• May 18 2024

இலங்கையின் 3 விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு ஒப்படைப்பு? – உண்மை என்ன ?

Chithra / Feb 23rd 2024, 11:22 am
image

Advertisement

 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட மூன்று இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் இலங்கை ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் தவறானவை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என தனக்கு அறிவித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய கூறியுள்ளார்.

கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

எவ்வாறாயினும் மத்தள விமான நிலையத்தால் பாரிய இழப்பை சந்தித்து வருவதால் அதனையும் யாழ் விமான நிலையத்தின் அபிவிருத்திகளுக்காகவுமே ஏனைய சாத்தியமான தரப்பினரின் பங்களிப்பைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏல செயல்முறைகளுக்கு ஏற்ப நடைபெறும் என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை வேறொரு தரப்பினருக்கு வழங்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 3 விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு ஒப்படைப்பு – உண்மை என்ன  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட மூன்று இலங்கை விமான நிலையங்களின் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் இலங்கை ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படும் சமீபத்திய செய்திகள் தவறானவை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என தனக்கு அறிவித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய கூறியுள்ளார்.கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.எவ்வாறாயினும் மத்தள விமான நிலையத்தால் பாரிய இழப்பை சந்தித்து வருவதால் அதனையும் யாழ் விமான நிலையத்தின் அபிவிருத்திகளுக்காகவுமே ஏனைய சாத்தியமான தரப்பினரின் பங்களிப்பைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏல செயல்முறைகளுக்கு ஏற்ப நடைபெறும் என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை வேறொரு தரப்பினருக்கு வழங்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement