• May 20 2024

நாடளாவிய ரீதியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கை...! சபையில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு...!

Sharmi / May 9th 2024, 1:53 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் பொருளாதார வலுவை  அதிகரித்து கொள்வதற்காக துரிதமான பொருளாதார பாதையை நாம் ஆரம்பிக்கவேண்டியதாக உள்ளது.

இதனால் எமது கடன் சுமை குறைக்கப்படலாம் வாழ்வாதார சுமை குறைக்கப்படலாம்.

அதேவேளை, மக்களுக்கு மென்மேலும் சுமையேற்றுகின்ற அரச நிறுவனங்களை மென்மேலும் பேணிச்செல்வதற்கு எமது பொருளாதாரத்திற்கு இயலுமை இல்லை.

எனவே இதற்கான மாற்றுவழி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

தனியார் துறையின் பங்களிப்புடன் அரச நிறுவனங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தால் மக்களுக்கு வரிச்சுமை இன்றி நட்டத்தில் இயங்காமல் அந்த அரச நிறுவனங்களை தொடர்ச்சியாக அதேவகையில் பேணிச்செல்வதற்கு வாய்ப்பில்லை.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றது. அவற்றில் அரசாங்க காணிகளும் உள்ளடங்குகின்றது.

எனவே, அவற்றை தனியார் துறைக்கு வழங்கி வெற்றிகரமாக  வெற்றிகரமான கமத்தொழில்  வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். குறித்த செயற்பாடுகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது.

அதேவேளை அந்த வியாபாரங்கள் மூலமாக நாட்டிற்கு பெருமளவில் அன்னிய செலாவணியும் கிடைத்துள்ளது.

எனவே, வணிக ரீதியில் செயற்படுத்தப்படுகின்ற ஏற்றுமதி தொடர்பிலான தனியார் துறையின் பொருளாதார செயற்பாடுகளுக்கு மற்றும் விவசாய நிகழ்ச்சி திட்டங்களுக்கு அவர்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம்.

1930 ஆம் ஆண்டுகளின் பிற்பாடு 30 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு காணிகளை வழங்கும் 'உரிமய' வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

இதனூடாக காணிகளின் உரித்து அவர்களுக்கு கிடைக்கின்றது.

இந் நிகழ்ச்சித் திட்டத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய முயற்சியாளர்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

அதேநேரம் தற்போதுள்ள விவசாய காணிகளில் இருந்து உச்சக்கட்ட பயன்பாட்டை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாக காணப்படுகின்றது.

எனவே செயற்திறன் மிக்க விவசாயத்துறையை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு நவீன விவசாய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன விவசாய தொழினுட்ப திட்டங்களை பயன்படுத்தி விவசாய மக்களை வலுப்படுத்துவது இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது 26 பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நவீன விவசாய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களில் பல பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை திரைசேரியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் விசேட அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கையினை நாம் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.




























நாடளாவிய ரீதியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கை. சபையில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு. நாடளாவிய ரீதியில் நவீன தொழினுட்பத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில்  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டின் பொருளாதார வலுவை  அதிகரித்து கொள்வதற்காக துரிதமான பொருளாதார பாதையை நாம் ஆரம்பிக்கவேண்டியதாக உள்ளது.இதனால் எமது கடன் சுமை குறைக்கப்படலாம் வாழ்வாதார சுமை குறைக்கப்படலாம்.அதேவேளை, மக்களுக்கு மென்மேலும் சுமையேற்றுகின்ற அரச நிறுவனங்களை மென்மேலும் பேணிச்செல்வதற்கு எமது பொருளாதாரத்திற்கு இயலுமை இல்லை.எனவே இதற்கான மாற்றுவழி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.தனியார் துறையின் பங்களிப்புடன் அரச நிறுவனங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தால் மக்களுக்கு வரிச்சுமை இன்றி நட்டத்தில் இயங்காமல் அந்த அரச நிறுவனங்களை தொடர்ச்சியாக அதேவகையில் பேணிச்செல்வதற்கு வாய்ப்பில்லை.நாட்டில் பெரும்பாலான இடங்களில் காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றது. அவற்றில் அரசாங்க காணிகளும் உள்ளடங்குகின்றது.எனவே, அவற்றை தனியார் துறைக்கு வழங்கி வெற்றிகரமாக  வெற்றிகரமான கமத்தொழில்  வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். குறித்த செயற்பாடுகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது.அதேவேளை அந்த வியாபாரங்கள் மூலமாக நாட்டிற்கு பெருமளவில் அன்னிய செலாவணியும் கிடைத்துள்ளது.எனவே, வணிக ரீதியில் செயற்படுத்தப்படுகின்ற ஏற்றுமதி தொடர்பிலான தனியார் துறையின் பொருளாதார செயற்பாடுகளுக்கு மற்றும் விவசாய நிகழ்ச்சி திட்டங்களுக்கு அவர்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம்.1930 ஆம் ஆண்டுகளின் பிற்பாடு 30 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு காணிகளை வழங்கும் 'உரிமய' வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.இதனூடாக காணிகளின் உரித்து அவர்களுக்கு கிடைக்கின்றது.இந் நிகழ்ச்சித் திட்டத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய முயற்சியாளர்கள் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.அதேநேரம் தற்போதுள்ள விவசாய காணிகளில் இருந்து உச்சக்கட்ட பயன்பாட்டை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாக காணப்படுகின்றது.எனவே செயற்திறன் மிக்க விவசாயத்துறையை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு நவீன விவசாய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.நவீன விவசாய தொழினுட்ப திட்டங்களை பயன்படுத்தி விவசாய மக்களை வலுப்படுத்துவது இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.தற்போது 26 பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நவீன விவசாய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் சில மாதங்களில் பல பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.அதேவேளை திரைசேரியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் விசேட அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கையினை நாம் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement