• Apr 07 2025

சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு; வெற்றிலைக்கேணி விவசாயிகள் கவலை

Chithra / Apr 6th 2025, 2:52 pm
image



யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால்  நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மண் அகழப்பட்டதால் 15 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்,

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி உணவத்து அம்மன் கோயிலை அண்டிய மக்களின் விவசாய நிலங்களில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால்  நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மணல் அகழப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்து மீளக்குடியேறிய காலத்திலும் இராணுவம் எமது விவசாய நிலங்களில் மணல் அகழ்ந்தார்கள். அப்போது எம்மால் இதை தடுக்கமுடியவில்லை

இதனால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் 15 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளோம்.சம்பவம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் எதுவித மாற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ஏனைய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை செய்து பயன்பெறுகின்ற போதிலும் நாம் எந்தவொரு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றோம்.

எமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உரிய அதிகாரிகள் மாற்றுவழியை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு; வெற்றிலைக்கேணி விவசாயிகள் கவலை யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால்  நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மண் அகழப்பட்டதால் 15 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது.சம்பவம் தொடர்பில் இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி உணவத்து அம்மன் கோயிலை அண்டிய மக்களின் விவசாய நிலங்களில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால்  நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மணல் அகழப்பட்டுள்ளது.போர் முடிவடைந்து மீளக்குடியேறிய காலத்திலும் இராணுவம் எமது விவசாய நிலங்களில் மணல் அகழ்ந்தார்கள். அப்போது எம்மால் இதை தடுக்கமுடியவில்லைஇதனால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் 15 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளோம்.சம்பவம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் எதுவித மாற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.ஏனைய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை செய்து பயன்பெறுகின்ற போதிலும் நாம் எந்தவொரு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றோம்.எமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உரிய அதிகாரிகள் மாற்றுவழியை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement