கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளுக்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான 21 மெட்ரிக் ரொன் விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் குறித்த விடையம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பதிலளித்த விவசாய அமைச்சர் அமரவீர குறித்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உறுதி அளித்தார்.
பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் - விவசாய அமைச்சர் அமரவீரவுக்கு டக்ளஸ் தொலைபேசி ஊடாக அறிவிப்பு.Samugammedia கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளுக்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான 21 மெட்ரிக் ரொன் விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் குறித்த விடையம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.இதன்போது பதிலளித்த விவசாய அமைச்சர் அமரவீர குறித்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உறுதி அளித்தார்.