• Sep 07 2026

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – முன்னோடித் திட்டம் ஆரம்பம்

Chithra / Sep 6th 2026, 1:36 pm
image


நெடுந்தூர தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒருங்கிணைப்பிலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


இதன் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் வைத்து நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI தொழில்நுட்ப சாதனங்களைப் பொருத்தும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.


ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படவுள்ளன. 


அவற்றின் செயற்பாடுகள் மற்றும் வெற்றிகரமான செயல்படுத்தலைக் கண்காணித்த பின்னர், நாடு முழுவதும் சேவையில் ஈடுபடும் ஏனைய பேருந்துகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சாரதிகளை குற்றவாளிகளாக்குவதை நோக்கமாகக் கொள்ளாமல், பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பேருந்தின் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.


வாகனம் செலுத்தும் போது சாரதிக்கு தூக்கக்கலக்கம் அல்லது சோர்வு ஏற்படுதல், கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துதல், ஆசனப் பட்டையை அணியாமல் இருப்பது உள்ளிட்ட பாதுகாப்பற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டால், குரல் செய்தி (Voice Message) மூலம் சாரதிக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படும்.


இதன் மூலம் சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் சோர்வு காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்த்து, நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – முன்னோடித் திட்டம் ஆரம்பம் நெடுந்தூர தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒருங்கிணைப்பிலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இதன் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் வைத்து நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI தொழில்நுட்ப சாதனங்களைப் பொருத்தும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படவுள்ளன. அவற்றின் செயற்பாடுகள் மற்றும் வெற்றிகரமான செயல்படுத்தலைக் கண்காணித்த பின்னர், நாடு முழுவதும் சேவையில் ஈடுபடும் ஏனைய பேருந்துகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சாரதிகளை குற்றவாளிகளாக்குவதை நோக்கமாகக் கொள்ளாமல், பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பேருந்தின் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.வாகனம் செலுத்தும் போது சாரதிக்கு தூக்கக்கலக்கம் அல்லது சோர்வு ஏற்படுதல், கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துதல், ஆசனப் பட்டையை அணியாமல் இருப்பது உள்ளிட்ட பாதுகாப்பற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டால், குரல் செய்தி (Voice Message) மூலம் சாரதிக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படும்.இதன் மூலம் சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் சோர்வு காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்த்து, நெடுந்தூர பேருந்துப் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement