• Sep 08 2024

வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி? வடக்கு உட்பட பல பகுதிகளில் மீண்டும் கனமழை; தென்பகுதியில் வெள்ள அபாயம்

Chithra / Jun 19th 2024, 7:29 am
image

Advertisement

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் ஜூன்  மாதம் 22 ஆம் திகதி வரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் 

தொடர்ந்து தெரிவிக்கையில், 

இன்று முதல் தென்மேற்கு பருவக்காற்று மழையின் இரண்டாவது சுற்று ஆரம்பமாகும். 

இதன்மூலம் கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை மாவட்டங்கள் அடுத்து வரும் 07 நாட்களுக்கு கன மழை பெறும் வாய்ப்புள்ளது. 

இக்காலப்பகுதியில் இம்மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை அடுத்த வாரமளவில் மத்திய வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் அடுத்த வார முற்பகுதியிலேயே இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி வடக்கு உட்பட பல பகுதிகளில் மீண்டும் கனமழை; தென்பகுதியில் வெள்ள அபாயம் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் ஜூன்  மாதம் 22 ஆம் திகதி வரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் தொடர்ந்து தெரிவிக்கையில், இன்று முதல் தென்மேற்கு பருவக்காற்று மழையின் இரண்டாவது சுற்று ஆரம்பமாகும். இதன்மூலம் கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை மாவட்டங்கள் அடுத்து வரும் 07 நாட்களுக்கு கன மழை பெறும் வாய்ப்புள்ளது. இக்காலப்பகுதியில் இம்மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தங்களுக்கு உட்படும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை அடுத்த வாரமளவில் மத்திய வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் அடுத்த வார முற்பகுதியிலேயே இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement