• Sep 28 2026

பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க 76 விவசாயிகளுக்கு Air Gun

Aathira / Sep 27th 2026, 1:57 pm
image

குரங்குகள், மயில்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களில் இருந்து விவசாயிகளின் விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், 76 விவசாயிகளுக்கு Air Gun-களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்  “உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டம் – 2026”  கீழ், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த Air Gun-கள் 50 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட விவசாய பணிப்பாளர் தரங்கிகா ஷியாமலி, கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் அருந்ததி வாசனா ஜயசுந்தர, கருவலகஸ்வெவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, Air Gun-களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பயனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க 76 விவசாயிகளுக்கு Air Gun குரங்குகள், மயில்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களில் இருந்து விவசாயிகளின் விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், 76 விவசாயிகளுக்கு Air Gun-களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்  “உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டம் – 2026”  கீழ், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த Air Gun-கள் 50 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட விவசாய பணிப்பாளர் தரங்கிகா ஷியாமலி, கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் அருந்ததி வாசனா ஜயசுந்தர, கருவலகஸ்வெவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது, Air Gun-களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பயனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement