• Nov 12 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சஜின் வாஸ் குணவர்தன சிஐடியில் ஆஜர்

Chithra / Oct 8th 2025, 12:42 pm
image

   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத்  தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று  காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  குறித்த முன் எச்சரிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்க குணவர்தன அழைக்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்திய உளவுத்துறையிலிருந்து  தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கும் அழைப்புகள் தனக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து  குணவர்தனவுக்கு அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தொலைபேசி எண்களை விசாரித்தபோது, ​​குறித்த  அழைப்புகள் குணவர்தனவால் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக புலனாய்வு அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இதனடிப்படையிலேயே புலனாய்வு அதிகாரிகள் குணவர்தனவிடம் தற்போது வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சஜின் வாஸ் குணவர்தன சிஐடியில் ஆஜர்    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத்  தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று  காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  குறித்த முன் எச்சரிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்க குணவர்தன அழைக்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்திய உளவுத்துறையிலிருந்து  தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கும் அழைப்புகள் தனக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து  குணவர்தனவுக்கு அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய தொலைபேசி எண்களை விசாரித்தபோது, ​​குறித்த  அழைப்புகள் குணவர்தனவால் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக புலனாய்வு அதிகாரிகள்  தெரிவித்தனர்.இதனடிப்படையிலேயே புலனாய்வு அதிகாரிகள் குணவர்தனவிடம் தற்போது வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement