• Sep 22 2024

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்! அழைப்பு விடுத்த ஞானசார தேரர்

Chithra / Aug 8th 2024, 7:54 am
image

Advertisement

 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்களே தீர்மானிக்கவுள்ளனர். ஆனால் மக்கள் அதனை தீர்மானிப்பதற்கு பொதுவான கொள்கை ஒன்று அறிவிக்கப்பட வேண்டும்.

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இதனை அறிவிக்கவேண்டும். இதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாரிய அளவிலான மாநாடு ஒன்றை நாம் ஏற்பாடு செய்யவுள்ளோம். 

இந்த மாநாட்டினை அரசியல் செல்வாக்கு இல்லாத 5 ஆயிரம் பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் நடத்தவுள்ளோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்து  76 ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்த காலப்பகுதியில் பல அரசியல் தலைவர்கள் தற்களுக்கு ஏற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டே இந்த நாட்டை ஆண்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களது கொள்கைகளை மகாசங்கரத்தினத்திடம் தனித்தனியாக முன்வைக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்ததினை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் புதிய சட்டங்களையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

மாறாக அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், பொருளாதார முன்னோற்றம் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வையே எதிர்பார்க்கின்றனர்.

எனவே, புதிய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கருத்தறியும் தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுவான கொள்கையொன்று அவசியம். 

இதனை நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைந்து அறிவிக்கவேண்டும்.

இந்த புதிய தீர்மானத்தினை பொதுபலசேனா அமைப்பு எடுத்துள்ளது என ஞானசார தேரர்  தெரிவித்துள்ளார்.

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அழைப்பு விடுத்த ஞானசார தேரர்  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்களே தீர்மானிக்கவுள்ளனர். ஆனால் மக்கள் அதனை தீர்மானிப்பதற்கு பொதுவான கொள்கை ஒன்று அறிவிக்கப்பட வேண்டும்.தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இதனை அறிவிக்கவேண்டும். இதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாரிய அளவிலான மாநாடு ஒன்றை நாம் ஏற்பாடு செய்யவுள்ளோம். இந்த மாநாட்டினை அரசியல் செல்வாக்கு இல்லாத 5 ஆயிரம் பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் நடத்தவுள்ளோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்து  76 ஆண்டுகள் கடந்து விட்டன.இந்த காலப்பகுதியில் பல அரசியல் தலைவர்கள் தற்களுக்கு ஏற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டே இந்த நாட்டை ஆண்டுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களது கொள்கைகளை மகாசங்கரத்தினத்திடம் தனித்தனியாக முன்வைக்க வேண்டும்.நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்ததினை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் புதிய சட்டங்களையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், பொருளாதார முன்னோற்றம் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வையே எதிர்பார்க்கின்றனர்.எனவே, புதிய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கருத்தறியும் தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுவான கொள்கையொன்று அவசியம். இதனை நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைந்து அறிவிக்கவேண்டும்.இந்த புதிய தீர்மானத்தினை பொதுபலசேனா அமைப்பு எடுத்துள்ளது என ஞானசார தேரர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement