• Feb 11 2026

அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்: விசாரணையை கோரும் கத்தோலிக்க திருச்சபை

Chithra / Jan 12th 2026, 8:49 am
image


கொழும்பு - பொரல்லையில் அமைந்துள்ள, அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டமை தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

 

அனைத்து புனிதர்கள் தேவாலயத்திற்குள் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

 

இதன்போதே, இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த இந்த கோரிக்கையை விடுத்தார்.

 

பொரல்லை தேவாலயத்தில் நடந்த குண்டு வைப்பு சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.

 

அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையையும் கண்டறிய வேண்டும் என்று திருச்சபை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்: விசாரணையை கோரும் கத்தோலிக்க திருச்சபை கொழும்பு - பொரல்லையில் அமைந்துள்ள, அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டமை தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து புனிதர்கள் தேவாலயத்திற்குள் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே, இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த இந்த கோரிக்கையை விடுத்தார். பொரல்லை தேவாலயத்தில் நடந்த குண்டு வைப்பு சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையையும் கண்டறிய வேண்டும் என்று திருச்சபை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement