• Jan 01 2025

நேர அட்டவணையை செயற்படுத்த நடைபெற்ற 82 கூட்டங்களும் வீண் - இராஜேஸ்வரன்

Tharmini / Dec 28th 2024, 9:39 am
image

தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) வட மாகாண தனியார் போக்குவரத்து துறைக்கும் அமைச்சர் இ.சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற, கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரன் இருந்த காலத்தில் இவ்வாறான 82 கூட்டங்கள் இரவு பகல் என ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதற்கு பின்னர் அந்த அமைச்சரால் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உருவாக்கப்பட்டது. 

அதற்கு பின்னர் அந்த அதிகார சபைக்கு எத்தனையோ பொது முகாமையாளர்கள் நியமனம் பெற்று வந்தார்கள். 

இருந்தாலும் அவர்கள் நடாத்தும் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திலும் எத்தனையோ கூட்டங்கள் நடைபெற்றன. 

அதிலும் எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லை. அவருக்கு வாக்குகள் வேணும் என்பதற்காக இலங்கை போக்குவரத்து சபையில் இருப்பவர்களை வைத்து யூனியன் அமைத்தார்.

அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு யூனியன், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு யூனியன் என கோண்டாவில் டிப்போவில் உள்ள ஊழியர்களை வைத்து 5 அல்லது ஆறு கட்சிகள் யூனியன் அமைத்திருக்கும். 

இவ்வாறு இருக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யூனியன் செல்வதை தான் முன்னாள் அமைச்சர் ஏற்றுக் கொள்வார்.

வடக்கு தவிர ஏனைய எட்டு மாகாணங்களிலும் அரச - தனியார் போக்துவரத்து துறைக்கு இடையே ஒற்றுமையான நேர அட்டவணை காணப்படுகிறது. 

அங்கு சீரான சேவை இடம்பெறுகிறது. ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை.

கடந்த கொரோனா காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் டிப்போவில் இருந்து கோடிக்கணக்கான பணம்தான் இங்கிருந்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது. 

இது பத்திரிகைகள் ஊடாக வெளிவந்த செய்தி.

ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் உள்ள பருத்தித்துறை, காரைநகர், கோண்டாவில் ஆகிய டிப்போக்களுக்கு பொறுப்பாக ஒருவர் இருப்பார். 

அவர் தனியார் துறையை நசுக்கி, இந்த வருமானத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என செயற்படுகின்றார் என்றார்.

நேர அட்டவணையை செயற்படுத்த நடைபெற்ற 82 கூட்டங்களும் வீண் - இராஜேஸ்வரன் தனியார் போக்குவரத்து துறைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே 60:40 என்ற நேர அட்டவணைக்காக 82 கூட்டங்கள் நடாத்தப்பட்டும் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நேற்று (27) வட மாகாண தனியார் போக்குவரத்து துறைக்கும் அமைச்சர் இ.சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற, கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரன் இருந்த காலத்தில் இவ்வாறான 82 கூட்டங்கள் இரவு பகல் என ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு பின்னர் அந்த அமைச்சரால் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னர் அந்த அதிகார சபைக்கு எத்தனையோ பொது முகாமையாளர்கள் நியமனம் பெற்று வந்தார்கள். இருந்தாலும் அவர்கள் நடாத்தும் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திலும் எத்தனையோ கூட்டங்கள் நடைபெற்றன. அதிலும் எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லை. அவருக்கு வாக்குகள் வேணும் என்பதற்காக இலங்கை போக்குவரத்து சபையில் இருப்பவர்களை வைத்து யூனியன் அமைத்தார்.அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு யூனியன், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு யூனியன் என கோண்டாவில் டிப்போவில் உள்ள ஊழியர்களை வைத்து 5 அல்லது ஆறு கட்சிகள் யூனியன் அமைத்திருக்கும். இவ்வாறு இருக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யூனியன் செல்வதை தான் முன்னாள் அமைச்சர் ஏற்றுக் கொள்வார்.வடக்கு தவிர ஏனைய எட்டு மாகாணங்களிலும் அரச - தனியார் போக்துவரத்து துறைக்கு இடையே ஒற்றுமையான நேர அட்டவணை காணப்படுகிறது. அங்கு சீரான சேவை இடம்பெறுகிறது. ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை.கடந்த கொரோனா காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் டிப்போவில் இருந்து கோடிக்கணக்கான பணம்தான் இங்கிருந்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது. இது பத்திரிகைகள் ஊடாக வெளிவந்த செய்தி.ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் உள்ள பருத்தித்துறை, காரைநகர், கோண்டாவில் ஆகிய டிப்போக்களுக்கு பொறுப்பாக ஒருவர் இருப்பார். அவர் தனியார் துறையை நசுக்கி, இந்த வருமானத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என செயற்படுகின்றார் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement