நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (07) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவினால் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகக் கோருவதென கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்ளைக்கு அமைவாக கொள்கை மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையிலேயே இந்த இராஜினாமாவை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிலை அனுப்பி வைக்குமாறு சகல பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரியுள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதிகள் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக உத்தரவு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (07) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவினால் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களை பதவி விலகக் கோருவதென கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்ளைக்கு அமைவாக கொள்கை மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையிலேயே இந்த இராஜினாமாவை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.இது தொடர்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிலை அனுப்பி வைக்குமாறு சகல பேரவை உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரியுள்ளார்.இந்த கடிதத்தின் பிரதிகள் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.