அமேசன் வலையமைப்பு சேவைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகளாவிய ரீதியில் செயலிகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களைப் பாதிக்கும் வகையில், நேற்று ஒரு பெரிய இணையச் செயலிழப்பு ஏற்பட்டது.
இதற்குக் காரணம் அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப கோளாறு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமேசன் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை செயலிழப்பால் பல நிறுவனங்களின் இணைய சேவை மற்றும் செயலிகளின் பயன்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்னாப் சாட், கென்வா, டூலிங்கோ, ரோப்ளாக்ஸ், அலெக்ஸா உள்ளிட்ட பல செயலிகளின் வேகம் குறைந்துள்ளதுடன் சில செயலிகள் முடங்கியுள்ளன.
இது அமேசன் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவாகும். இதனை சார்ந்து உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இணையத்தளங்களும், சேவைகளும் செயல்படுகின்றன.
அனைவரது ஸ்மார்ட் கைப்பேசியில் உள்ள பல செயலிகள் அமேசன் வெப் சர்வீஸ் (AWS) தரவு மையங்களிலிருந்தே இயங்குகின்றன.
இந்த நிலையிலேயே அமேசனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல செயலிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசன் வலையமைப்பு சேவைகளில் கோளாறு; உலகளாவிய ரீதியில் முடங்கிய செயலிகள் அமேசன் வலையமைப்பு சேவைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகளாவிய ரீதியில் செயலிகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களைப் பாதிக்கும் வகையில், நேற்று ஒரு பெரிய இணையச் செயலிழப்பு ஏற்பட்டது.இதற்குக் காரணம் அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப கோளாறு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அமேசன் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை செயலிழப்பால் பல நிறுவனங்களின் இணைய சேவை மற்றும் செயலிகளின் பயன்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்னாப் சாட், கென்வா, டூலிங்கோ, ரோப்ளாக்ஸ், அலெக்ஸா உள்ளிட்ட பல செயலிகளின் வேகம் குறைந்துள்ளதுடன் சில செயலிகள் முடங்கியுள்ளன. இது அமேசன் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவாகும். இதனை சார்ந்து உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இணையத்தளங்களும், சேவைகளும் செயல்படுகின்றன. அனைவரது ஸ்மார்ட் கைப்பேசியில் உள்ள பல செயலிகள் அமேசன் வெப் சர்வீஸ் (AWS) தரவு மையங்களிலிருந்தே இயங்குகின்றன. இந்த நிலையிலேயே அமேசனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல செயலிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.