• Mar 16 2026

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: கொலைக்கு உதவிய நபர் கைது!

shanu / Dec 25th 2025, 9:50 am
image

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 


அம்பலாங்கொடையில் கடந்த 22ஆம் திகதி , மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். 


இச்சம்பவம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 


இதற்கமைய, இக் குற்றச் செயலுக்கு உதவிய சந்தேக நபர், நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 


பின்னர், சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: கொலைக்கு உதவிய நபர் கைது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பலாங்கொடையில் கடந்த 22ஆம் திகதி , மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இச்சம்பவம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதற்கமைய, இக் குற்றச் செயலுக்கு உதவிய சந்தேக நபர், நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement