இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்த அமெரிக்க பெண் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 55 வயதான கெய்ட்லின் ஜூலி கிளார்க் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டி அருப்பொல, தர்மசோக்கா மாவத்தையில் உள்ள வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இவர் கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் உடலம் கண்டி தேசிய மருத்துவமனையின் பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் சடலமாக மீட்பு இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்த அமெரிக்க பெண் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 55 வயதான கெய்ட்லின் ஜூலி கிளார்க் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கண்டி அருப்பொல, தர்மசோக்கா மாவத்தையில் உள்ள வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளார். இவர் கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.குறித்த பெண் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடலம் கண்டி தேசிய மருத்துவமனையின் பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.