இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் மனித உரிமைகள் மீதான தாக்குதல் என்றும்,
இது பரந்த அளவிலான தனிநபர்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீது கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் கையாளபட்டுள்ள புதிய உத்தியாகவே இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இணைய பாதுகாப்பு சட்டம் உடனடியாக மீளப்பெற்று அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புசபை வலியுறுத்தியுள்ளது.
இணைய பாதுகாப்பு சட்டம் மனித உரிமைகள் மீதான தாக்குதல் - சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் மனித உரிமைகள் மீதான தாக்குதல் என்றும், இது பரந்த அளவிலான தனிநபர்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீது கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் கையாளபட்டுள்ள புதிய உத்தியாகவே இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், இணைய பாதுகாப்பு சட்டம் உடனடியாக மீளப்பெற்று அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புசபை வலியுறுத்தியுள்ளது.