ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியேறும் போது என்னை சுட்டுக் கொல்வதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபர், களுத்துறை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை படுகொலை செய்ய முயற்சிக்கும் நபரின் பெயரையும் பொலிஸ்மா அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தாமதிக்காமல் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். எனது பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஜகத் விதான எம்.பி நடவடிக்கை எடுத்ததுடன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது ஒரு பாரதூரமான நிலைமை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
என்னை படுகொலை செய்ய ஒரு தரப்பினர் முயற்சி; பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் ஜகத் விதான எம்.பி. வலியுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்து வெளியேறும் போது என்னை சுட்டுக் கொல்வதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபர், களுத்துறை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.என்னை படுகொலை செய்ய முயற்சிக்கும் நபரின் பெயரையும் பொலிஸ்மா அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தாமதிக்காமல் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். எனது பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஜகத் விதான எம்.பி நடவடிக்கை எடுத்ததுடன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்தார். அதன்பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது ஒரு பாரதூரமான நிலைமை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.