காலி - உரகஸ்மான்ஹண்டி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி 74 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, நேற்று முன்தினம் (13) மாலை அருகிலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காற்றினால் மரம் ஒன்று சாலையில் விழுந்ததையடுத்து, மின்கம்பியும் அறுந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருள் சூழ்ந்திருந்த காரணத்தால் சாலையில் விழுந்திருந்த மின்கம்பியை கவனிக்காத அவர், அதில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மான்ஹண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பயணங்களின்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி பலி - காலியில் துயரம் காலி - உரகஸ்மான்ஹண்டி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி 74 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, நேற்று முன்தினம் (13) மாலை அருகிலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.பலத்த காற்றினால் மரம் ஒன்று சாலையில் விழுந்ததையடுத்து, மின்கம்பியும் அறுந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருள் சூழ்ந்திருந்த காரணத்தால் சாலையில் விழுந்திருந்த மின்கம்பியை கவனிக்காத அவர், அதில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் உரகஸ்மான்ஹண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பயணங்களின்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.