யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய செல்வநாயகம் பாலசரஸ்பதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றுமுன்தினம் (09) வீட்டுக்கு பின்னால் தென்னை ஓலையுடன் இருந்த மிகவும் பெரிய ஒரு குளவிக்கூட்டை தட்டிப் பார்த்துள்ளார். இதன்போது அதில் இருந்த குளவிகள் அவர்மீது கொட்டியுள்ளது.
பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய செல்வநாயகம் பாலசரஸ்பதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றுமுன்தினம் (09) வீட்டுக்கு பின்னால் தென்னை ஓலையுடன் இருந்த மிகவும் பெரிய ஒரு குளவிக்கூட்டை தட்டிப் பார்த்துள்ளார். இதன்போது அதில் இருந்த குளவிகள் அவர்மீது கொட்டியுள்ளது. பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தினர்.