• Mar 05 2026

கந்தளாய் காட்டில் ரயில் இயந்திரத்திற்குள் சிக்குண்ட யானை; பல மைல் தூரம் கால்நடையாக பயணித்த பயணிகள்!

Chithra / Feb 17th 2026, 8:39 am
image

 கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தபால் கடுகதி ரயில் இன்று அதிகாலை கந்தளாய், அக்போபுர காட்டுப் பகுதியில் யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் ரயில் இயந்திரத்திற்குள் யானை நசுங்கி சிக்கிக்கொண்டதையடுத்து, போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,


நேற்று (16) இரவு 9:30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்ட இரவு நேர தபால் கடுகதி ரயில், இன்று(17) அதிகாலை 5 மணியளவில் அக்போபுர காட்டுப் பகுதியை கடக்க முயன்றது. 


இதன்போது, தண்டவாளத்தைக் குறுக்கறுக்க முயன்ற யானை ஒன்று   ரயிலுடன் மோதியதுடன், அதன் உடல் இயந்திரத்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டது.


இந்த விபத்தினால்  ரயிலை  மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. விபத்து நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், மாற்று போக்குவரத்து வசதிகள் எவையும் உடனடியாகக் கிடைக்கவில்லை. 


இதனால் அச்சமடைந்த பயணிகள், யானை நடமாட்டம் மிகுந்த அந்த ஆபத்தான காட்டுப் பாதை வழியாகவே பல மைல் தூரம் கால்நடையாகப் பயணித்து பிரதான வீதியை வந்தடைந்தனர்.


பின்னர் அங்கிருந்து வேறு வாகனங்கள் மூலம் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.


இச்சம்பவம் குறித்து அந்தப் ரயிலில் பயணித்த கிண்ணியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.எச். மௌஜுத் எமக்கு கருத்துத் தெரிவிக்கையில், 


"அதிகாலை வேளையில் ஏற்பட்ட பலத்த அதிர்வினால் நாம் திடுக்கிட்டு எழுந்தோம். இயந்திரத்திற்குள் யானை சிக்கியிருந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. வேறு வழியின்றி குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் காட்டின் வழியாகப் பயத்துடன் நடந்து சென்று வீதியை அடைந்தோம்" எனத் தெரிவித்தார்.


​விபத்தினால் சேதமடைந்த ரயிலை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கந்தளாய் காட்டில் ரயில் இயந்திரத்திற்குள் சிக்குண்ட யானை; பல மைல் தூரம் கால்நடையாக பயணித்த பயணிகள்  கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தபால் கடுகதி ரயில் இன்று அதிகாலை கந்தளாய், அக்போபுர காட்டுப் பகுதியில் யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இயந்திரத்திற்குள் யானை நசுங்கி சிக்கிக்கொண்டதையடுத்து, போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,நேற்று (16) இரவு 9:30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்ட இரவு நேர தபால் கடுகதி ரயில், இன்று(17) அதிகாலை 5 மணியளவில் அக்போபுர காட்டுப் பகுதியை கடக்க முயன்றது. இதன்போது, தண்டவாளத்தைக் குறுக்கறுக்க முயன்ற யானை ஒன்று   ரயிலுடன் மோதியதுடன், அதன் உடல் இயந்திரத்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டது.இந்த விபத்தினால்  ரயிலை  மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. விபத்து நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், மாற்று போக்குவரத்து வசதிகள் எவையும் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனால் அச்சமடைந்த பயணிகள், யானை நடமாட்டம் மிகுந்த அந்த ஆபத்தான காட்டுப் பாதை வழியாகவே பல மைல் தூரம் கால்நடையாகப் பயணித்து பிரதான வீதியை வந்தடைந்தனர்.பின்னர் அங்கிருந்து வேறு வாகனங்கள் மூலம் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.இச்சம்பவம் குறித்து அந்தப் ரயிலில் பயணித்த கிண்ணியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.எச். மௌஜுத் எமக்கு கருத்துத் தெரிவிக்கையில், "அதிகாலை வேளையில் ஏற்பட்ட பலத்த அதிர்வினால் நாம் திடுக்கிட்டு எழுந்தோம். இயந்திரத்திற்குள் யானை சிக்கியிருந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. வேறு வழியின்றி குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் காட்டின் வழியாகப் பயத்துடன் நடந்து சென்று வீதியை அடைந்தோம்" எனத் தெரிவித்தார்.​விபத்தினால் சேதமடைந்த ரயிலை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement