• May 18 2024

திருமலையில் எல்லைமீறும் அராஜகம்; பொங்கலுக்கும் தடையா? பாய்ந்து சென்ற பொலிசார்; பக்தர்கள் அதிர்ச்சி!

Chithra / Feb 23rd 2024, 3:14 pm
image

Advertisement


திருகோணமலை - தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை பொலிஸார் இன்று  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும்  திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்  கலந்து கொண்டனர்.


இச்சந்தர்ப்பத்தில் கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில்,

போராட்டங்களை தடுக்கும் ஆயுதங்களுடன் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் விரட்டியுள்ளனர்

இதன் போது இப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளரான லவகுசராசாவுக்கும் அவருடன் வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களுக்கும் நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்ததுடன்,


பொங்கலை தடுத்து நிறுத்தி அக்கிராம மக்களையும் வெளியேற்றி அவர்களை பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயலாகும். 

ஆகவே இச்சம்பவத்தை கிராம மக்களும் சிவில் சமுகங்களும் கண்டிப்பதுடன், இதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருமலையில் எல்லைமீறும் அராஜகம்; பொங்கலுக்கும் தடையா பாய்ந்து சென்ற பொலிசார்; பக்தர்கள் அதிர்ச்சி திருகோணமலை - தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை பொலிஸார் இன்று  தடுத்து நிறுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும்  திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்  கலந்து கொண்டனர்.இச்சந்தர்ப்பத்தில் கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில்,போராட்டங்களை தடுக்கும் ஆயுதங்களுடன் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் விரட்டியுள்ளனர்இதன் போது இப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் செயற்பாட்டாளரான லவகுசராசாவுக்கும் அவருடன் வருகை தந்திருந்த செயற்பாட்டாளர்களுக்கும் நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்ததுடன்,பொங்கலை தடுத்து நிறுத்தி அக்கிராம மக்களையும் வெளியேற்றி அவர்களை பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.இச்சம்பவம் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயலாகும். ஆகவே இச்சம்பவத்தை கிராம மக்களும் சிவில் சமுகங்களும் கண்டிப்பதுடன், இதற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement