• Sep 17 2024

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு

Sharmi / Aug 14th 2024, 10:44 am
image

Advertisement

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் எதிர்வரும் 27ஆம், 28 ஆம் திகதிகளில் இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 27 திகதியும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதியும் மாவட்டச் செயலக கேட்போர் கூடங்களில் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்எஸ்.சாள்ஸ் மற்றும்  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெறவுள்ளன.

இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசணையுடன்தான் அவற்றை மாவட்ட பதில் அரச அதிபர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டத்தில் எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரஸ்தாபிக்க முடியாது என்ற நிபந்தனையுடன் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் எதிர்வரும் 27ஆம், 28 ஆம் திகதிகளில் இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 27 திகதியும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதியும் மாவட்டச் செயலக கேட்போர் கூடங்களில் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்எஸ்.சாள்ஸ் மற்றும்  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெறவுள்ளன.இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசணையுடன்தான் அவற்றை மாவட்ட பதில் அரச அதிபர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டத்தில் எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரஸ்தாபிக்க முடியாது என்ற நிபந்தனையுடன் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement