• Sep 24 2026

அனோஜனை மன்னிக்க வேண்டும்.! சவூதி அரசிடம் யாழ் சர்வமத பேரவை கோரிக்கை

Aathira / Sep 24th 2026, 8:57 am
image

சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கிறோம். அதேவேளை அனோஜனை மன்னித்து, அவரும் அவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் என யாழ் மாவட்ட சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று  இடம்பெற்றபோது கருத்து தெரிவித்த சர்வமத தலைவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 

கல்முனை நற்பிட்டிமுனை இளைஞர்  சிவராசா அனோஜன் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்கும்படி யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் அறிக்கை வேண்டுகிறது. 

இறைவன் மிகுந்த இரக்கமுடையவர் என்பதால் உயிரை காப்பாற்றும்படி மண்டியிடுகிறோம்.

இஸ்லாமியர், தமது உயிரினும் மேலானவராக கருதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முகநூலில் அவதூறான கருத்தொன்றை பதிவிட்டமை தவறு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். 

இத்தகைய பொறுப்பற்ற முகநூல் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தொடரக்கூடாது. இந்த விடயத்தை கையிலெடுத்து யாரும் தேவையற்ற மனிதநேய மறுப்பு நிலைப்பாட்டை முன்வைக்கக்கூடாது. எமது சமயத்தை வணங்குவதும் ஏனைய சமயங்களை மதிப்பதும் முறையான ஆன்மிக வெளிப்பாடு.

ஷரியர் சட்டப்படி தடைசெய்யப்பட்ட செயலான, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வாய்மொழியாக அவமதித்த குற்றத்திற்காகவும் மத விழுமியங்கள் மற்றும் பொது ஒழுக்கநெறிகளுக்கு முரணான உள்ளடக்கத்தை இணையத்தில் தயாரித்து வெளியிட்ட குற்றத்திற்காகவும் அனோஜன் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது என அறிந்தோம். 

குற்றத்திற்காக சி. அனோஜன் அவர்கட்கு ஆரம்பத்தில் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேன்முறையீட்டினை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது எனவும் அறிந்தோம். பயம், பதட்டம், மனக்காயங்கள் போன்றவற்றுக்குள் தவிக்கும் இவரையும் இவரது உறவுகள் அனைவரதும் வேதனைமிகு புலம்பல்களை குறிப்பிடுகிறோம். 

இவரை காப்பாற்றும்படி கோரும் இஸ்லாமியர் மற்றும் ஏனைய அன்பர்களின் வேண்டுகோள்களையும் மீள முன்வைக்கின்றோம். சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கும் நாம், இவரை மன்னித்து, இவரும் இவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் - என்றனர்.

அனோஜனை மன்னிக்க வேண்டும். சவூதி அரசிடம் யாழ் சர்வமத பேரவை கோரிக்கை சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கிறோம். அதேவேளை அனோஜனை மன்னித்து, அவரும் அவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் என யாழ் மாவட்ட சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று  இடம்பெற்றபோது கருத்து தெரிவித்த சர்வமத தலைவர்கள் இதனை தெரிவித்தனர்.மேலும் தெரிவிக்கையில், கல்முனை நற்பிட்டிமுனை இளைஞர்  சிவராசா அனோஜன் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்கும்படி யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் அறிக்கை வேண்டுகிறது. இறைவன் மிகுந்த இரக்கமுடையவர் என்பதால் உயிரை காப்பாற்றும்படி மண்டியிடுகிறோம்.இஸ்லாமியர், தமது உயிரினும் மேலானவராக கருதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முகநூலில் அவதூறான கருத்தொன்றை பதிவிட்டமை தவறு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இத்தகைய பொறுப்பற்ற முகநூல் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தொடரக்கூடாது. இந்த விடயத்தை கையிலெடுத்து யாரும் தேவையற்ற மனிதநேய மறுப்பு நிலைப்பாட்டை முன்வைக்கக்கூடாது. எமது சமயத்தை வணங்குவதும் ஏனைய சமயங்களை மதிப்பதும் முறையான ஆன்மிக வெளிப்பாடு.ஷரியர் சட்டப்படி தடைசெய்யப்பட்ட செயலான, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வாய்மொழியாக அவமதித்த குற்றத்திற்காகவும் மத விழுமியங்கள் மற்றும் பொது ஒழுக்கநெறிகளுக்கு முரணான உள்ளடக்கத்தை இணையத்தில் தயாரித்து வெளியிட்ட குற்றத்திற்காகவும் அனோஜன் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது என அறிந்தோம். குற்றத்திற்காக சி. அனோஜன் அவர்கட்கு ஆரம்பத்தில் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேன்முறையீட்டினை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது எனவும் அறிந்தோம். பயம், பதட்டம், மனக்காயங்கள் போன்றவற்றுக்குள் தவிக்கும் இவரையும் இவரது உறவுகள் அனைவரதும் வேதனைமிகு புலம்பல்களை குறிப்பிடுகிறோம். இவரை காப்பாற்றும்படி கோரும் இஸ்லாமியர் மற்றும் ஏனைய அன்பர்களின் வேண்டுகோள்களையும் மீள முன்வைக்கின்றோம். சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கும் நாம், இவரை மன்னித்து, இவரும் இவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் - என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement