• Apr 21 2026

கொழும்பில் மீண்டும் குண்டுத்தாக்குதல் - வெளியாகிய செய்தி முற்றிலும் பொய் !

shanu / Apr 21st 2026, 4:52 pm
image

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். 


குறித்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் என்றவாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை.  


எவ்வாறாயினும், 'கஞ்சிப்பானை இம்ரான்' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மீண்டும் குண்டுத்தாக்குதல் - வெளியாகிய செய்தி முற்றிலும் பொய் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். குறித்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் என்றவாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை.  எவ்வாறாயினும், 'கஞ்சிப்பானை இம்ரான்' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement