டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 3000 ஆயிரம் கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியுள்ளன.
இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. 20 பேர் காயமடைந்துள்ளதோடு, காயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த வெடிவிபத்தில் காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் எரிந்து நாசமாகி உள்ளன..
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மீண்டும் வெடிவிபத்து ; 9 பேர் உயிரிழப்பு, 20 பேருக்கு காயம் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 3000 ஆயிரம் கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போது, திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியுள்ளன.இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளதோடு, காயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தில் காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.