• May 24 2026

போதை தடுப்பு இளைஞர் ஊர்வலம்

shanu / May 23rd 2026, 8:29 pm
image

இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை தடுப்பு நடவடிக்கை தொடர்பிலான விழிப்புணர்வு நடைபவணி ஒன்று இன்று (23) திருகோணமலையில் இடம் பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.


போதை தடுப்பு தொடர்பிலான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய வாசகங்களை ஏந்தியவாறு திருகோணமலை ஆளுனர் செயலகத்தில் இருந்து திருகோணமலை பஸ் நிலையம் வரை ஊர்வலமாக நடைபவணியாக சென்றனர்.


இதில் பிரதியமைச்சர் அருண்கேமச் சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன உட்பட இளைஞர் சம்மேளனங்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையாடல்களும் இடம் பெற்றன. 


போதை தடுப்பு இளைஞர் ஊர்வலம் இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை தடுப்பு நடவடிக்கை தொடர்பிலான விழிப்புணர்வு நடைபவணி ஒன்று இன்று (23) திருகோணமலையில் இடம் பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.போதை தடுப்பு தொடர்பிலான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய வாசகங்களை ஏந்தியவாறு திருகோணமலை ஆளுனர் செயலகத்தில் இருந்து திருகோணமலை பஸ் நிலையம் வரை ஊர்வலமாக நடைபவணியாக சென்றனர்.இதில் பிரதியமைச்சர் அருண்கேமச் சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன உட்பட இளைஞர் சம்மேளனங்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையாடல்களும் இடம் பெற்றன. 

Advertisement

Advertisement

Advertisement