• Nov 22 2024

அனுர- வெளிநாட்டு இராஜதந்திரிகள் திடீர் சந்திப்பு...! வெளியான காரணம்...!

Sharmi / Mar 7th 2024, 8:41 am
image

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம்(07) கொழும்பில்  இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில்  இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.  

இச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி  மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்தநாணாயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.







அனுர- வெளிநாட்டு இராஜதந்திரிகள் திடீர் சந்திப்பு. வெளியான காரணம். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம்(07) கொழும்பில்  இடம்பெற்றது.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில்  இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.  இச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி  மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்தநாணாயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement