• Nov 26 2024

அநுர அரசாங்கமும் ஊழலுடன் சம்பந்தம்? சுமந்திரன் சந்தேகம்

Sharmi / Nov 1st 2024, 10:33 am
image

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அரசும் ஊழலுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றது போல் தெரிகின்றது என தமிழரசு கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(31) நடத்திய ஊடக சந்திப்பின்போது பார் லைசன்ஸ் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"பார் லைசன்ஸ் விவகாரத்தில் தாம் ஆட்சிக்கு வந்து மூன்று நாட்களில் அதன் பெயர் விபரங்களை வெளியிடுவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் கூறியிருந்தார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் இதுவரை எந்த விபரங்களையும் அவர்கள்  வெளியிடவில்லை.

நானும் விபரத்தை வெளியிடச் சொல்லி பகிரங்கமாகக் கேட்டிருந்தேன். அதுமட்டும் இல்லாமல் அந்த விபரங்களை வெளியிடாவிட்டால் நீங்களும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டதாகவே சந்தேகம் வருகின்றது என்றும் சொல்லியிருந்தேன்.

ஆனால், இப்ப அந்தச் சந்தேகம் விலகி விட்டது.

ஆக அவர்களும் ஊழலில் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் போல்தான் தெரிகின்றது.

உண்மையில் அப்படி இல்லையெனில் ஏன் இன்னமும் வெளியிடாமல் இருக்கின்றார்கள்.?" - என்று கேள்வியெழுப்பினார்.

அநுர அரசாங்கமும் ஊழலுடன் சம்பந்தம் சுமந்திரன் சந்தேகம் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான புதிய அரசும் ஊழலுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றது போல் தெரிகின்றது என தமிழரசு கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று(31) நடத்திய ஊடக சந்திப்பின்போது பார் லைசன்ஸ் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்."பார் லைசன்ஸ் விவகாரத்தில் தாம் ஆட்சிக்கு வந்து மூன்று நாட்களில் அதன் பெயர் விபரங்களை வெளியிடுவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் கூறியிருந்தார்கள்.ஆனால், இந்த விடயத்தில் இதுவரை எந்த விபரங்களையும் அவர்கள்  வெளியிடவில்லை.நானும் விபரத்தை வெளியிடச் சொல்லி பகிரங்கமாகக் கேட்டிருந்தேன். அதுமட்டும் இல்லாமல் அந்த விபரங்களை வெளியிடாவிட்டால் நீங்களும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டதாகவே சந்தேகம் வருகின்றது என்றும் சொல்லியிருந்தேன்.ஆனால், இப்ப அந்தச் சந்தேகம் விலகி விட்டது. ஆக அவர்களும் ஊழலில் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் போல்தான் தெரிகின்றது. உண்மையில் அப்படி இல்லையெனில் ஏன் இன்னமும் வெளியிடாமல் இருக்கின்றார்கள்." - என்று கேள்வியெழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement