உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாடுகளுக்குச் செல்லாமல் மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றம் சுமத்தியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், இலங்கை வலுவான சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மாநாடுகளில் நாட்டின் தலைவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
உலகத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இக்காலகட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாடு செல்வதைத் தவிர்த்துவிட்டு மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றார்.
அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகவும், புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்த அநுரகுமார திஸாநாயக்க, ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளார். புதிய அரசமைப்புக்குப் பதிலாக ஒரேயொரு சரத்தை மட்டுமே திருத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் விலைச் சூத்திரம் ஆகியவற்றை இரத்துச் செய்வதாகத் தேர்தலுக்கு முன்னர் கூறியவர்கள், இப்போது அதுபற்றிப் பேசுவதில்லை. மாறாக மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துக்களையே ஜனாதிபதி பேசி வருகின்றார்.
அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்ட இலக்குகளையும் தாண்டி அரசு மக்கள் மீது கடுமையான வரிச்சுமையைச் சுமத்தி வருகின்றது.
ஜனாதிபதி பெருமையுடன் கூறும் எரிபொருள் மானியமானது மக்கள் செலுத்தும் வரிப் பணமே தவிர, மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியிலிருந்து வழங்கப்படுவதல்ல என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
2026 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன. இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.12 சதவீத அதிகரிப்பு.
நாட்டில் சட்டம் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுவது உண்மையானால், ஜனாதிபதியான பின்னர் இடம்பெற்ற 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாகச் சுங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை, தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டமை, திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை போன்ற சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை அறிக்கைகள் ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை?
இதன்மூலம் பெலவத்தையிலுள்ள ஆதரவாளர்களுக்கு ஒரு சட்டமும், ஏனையோருக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறையிலிருப்பது வெளிப்படுகின்றது.
சூரிய சக்தி முதலீட்டாளர்கள் இன்று அநாதரவாக்கப்பட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
அரசுக்கா அல்லது எதிர்க்கட்சிக்கா மக்களின் உண்மையான ஆதரவு உள்ளது என்பதை அறிந்துகொள்ள மாகாண சபைத் தேர்தலே சிறந்த தீர்வாகும். ஓராண்டுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறிய அரசு, தற்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனை இழுத்தடித்து வருகின்றது.
எதிர்க்கட்சிகள் சில பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட்டாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை. ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்துச் செல்வதற்கான ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு." - என்றார்.
ஐ.நா. மாநாட்டைத் தவிர்த்துவிட்டு அரசியல் பணிகளில் அநுர ஈடுபாடு. ஹர்ஷண ராஜகருணா எம்.பி. கடும் விமர்சனம் உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாடுகளுக்குச் செல்லாமல் மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றம் சுமத்தியுள்ளார்.எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், இலங்கை வலுவான சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மாநாடுகளில் நாட்டின் தலைவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.உலகத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இக்காலகட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிநாடு செல்வதைத் தவிர்த்துவிட்டு மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றார்.அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகவும், புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்த அநுரகுமார திஸாநாயக்க, ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளார். புதிய அரசமைப்புக்குப் பதிலாக ஒரேயொரு சரத்தை மட்டுமே திருத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் விலைச் சூத்திரம் ஆகியவற்றை இரத்துச் செய்வதாகத் தேர்தலுக்கு முன்னர் கூறியவர்கள், இப்போது அதுபற்றிப் பேசுவதில்லை. மாறாக மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துக்களையே ஜனாதிபதி பேசி வருகின்றார்.அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்ட இலக்குகளையும் தாண்டி அரசு மக்கள் மீது கடுமையான வரிச்சுமையைச் சுமத்தி வருகின்றது.ஜனாதிபதி பெருமையுடன் கூறும் எரிபொருள் மானியமானது மக்கள் செலுத்தும் வரிப் பணமே தவிர, மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியிலிருந்து வழங்கப்படுவதல்ல என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.2026 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன. இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.12 சதவீத அதிகரிப்பு.நாட்டில் சட்டம் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுவது உண்மையானால், ஜனாதிபதியான பின்னர் இடம்பெற்ற 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாகச் சுங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை, தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டமை, திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை போன்ற சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை அறிக்கைகள் ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லைஇதன்மூலம் பெலவத்தையிலுள்ள ஆதரவாளர்களுக்கு ஒரு சட்டமும், ஏனையோருக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறையிலிருப்பது வெளிப்படுகின்றது.சூரிய சக்தி முதலீட்டாளர்கள் இன்று அநாதரவாக்கப்பட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.அரசுக்கா அல்லது எதிர்க்கட்சிக்கா மக்களின் உண்மையான ஆதரவு உள்ளது என்பதை அறிந்துகொள்ள மாகாண சபைத் தேர்தலே சிறந்த தீர்வாகும். ஓராண்டுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறிய அரசு, தற்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனை இழுத்தடித்து வருகின்றது.எதிர்க்கட்சிகள் சில பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட்டாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்விதச் சிக்கலும் இல்லை. ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்துச் செல்வதற்கான ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு." - என்றார்.