• Nov 27 2024

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு ஆசிரியர் நியமனம் இடம்பெறும் - சுஷில் பிரேமஜெயந்த தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 1st 2023, 1:38 pm
image

நீதிமன்றத்திலே முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு துரிதமாக முடிவடைந்த பின்னர் அவர்களை ஆட்ச்சேர்ப்பதற்காக எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுஷில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

2019 ஆம் ஆண்டு தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி அதிபர்களாக அரச சேவையில் இணைந்து கொள்கையில் அதன் மூலமாக 20000 பேர் பயிற்சிகளுக்ககாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு  அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் அரசசேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக ஆசிரியர் பிரமாணக்குறிப்புகளுக்கு அமைவாக பரீட்சை மற்றும் நேர்முக பரீட்ச்சைகள் மூலமாக தெரிவு செய்யபடுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

அந்த சந்தர்ப்பத்திலே இருந்த ஆசிரிய பற்றாக்குறைக்கு அமைவாக இச்சந்தர்ப்பத்தில் அரச சேவையில்  ஈடுபடுகின்ற பட்டதாரிகளுக்கு அமைவாகவும் தகைமைகளுக்கு அமைவாகவும் விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு கோரப்பட்டிருந்தது. 

51000 பேரளவில் அரசசேவையில் தற்போது ஈடுபட்டிருக்கின்ற பட்டதாரிகளிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டிருக்கிறது. 23 ஆம் திகதி பரீட்சை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்  பரீட்ச்சத்திணைக்களம் அதற்கு தேவையான நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

விண்ணபிக்கப்பட்டிருந்த பட்டதாரிகளில் 33 பேர் 3 மனுக்களை உச்ச நீதிமன்றிலே மனித உரிமைகள் அடிப்படையிலே தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும்  இந்த பரிட்சை நடாத்துவதற்கு 23 ஆம் திகதி மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட திகதியில் நடத்தாததால் உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால கட்டளை ஒன்று விதிக்கப்பட்டிருந்தது. 

தற்பொழுது அந்த பரீட்சிக்காக 9 வாரங்கள்  கடந்து சென்றுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து உச்ச நீதிமன்றதால்  தீர்மானம் வழங்கப்படும் வரை இந்த அபிவிருத்தி அலுவலர்களை  உள்ளீர்ப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் அல்ல. நீதிமன்றத்திலே முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு துரிதமாக முடிவடைந்த பின்னர் அவர்களை ஆட்ச்சேர்ப்பதற்காக எதிர்பார்க்கப்படுகின்றது. 

தற்பொழுது மாகாணத்திலே ஆட்சேர்க்கப்பட்டுள்ள அல்லது அதிலுள்ள மனுதாரருக்கு எந்த விதமான தாக்கங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு ஆசிரியர் நியமனம் இடம்பெறும் - சுஷில் பிரேமஜெயந்த தெரிவிப்பு.samugammedia நீதிமன்றத்திலே முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு துரிதமாக முடிவடைந்த பின்னர் அவர்களை ஆட்ச்சேர்ப்பதற்காக எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுஷில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி அதிபர்களாக அரச சேவையில் இணைந்து கொள்கையில் அதன் மூலமாக 20000 பேர் பயிற்சிகளுக்ககாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு  அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் அரசசேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக ஆசிரியர் பிரமாணக்குறிப்புகளுக்கு அமைவாக பரீட்சை மற்றும் நேர்முக பரீட்ச்சைகள் மூலமாக தெரிவு செய்யபடுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  அந்த சந்தர்ப்பத்திலே இருந்த ஆசிரிய பற்றாக்குறைக்கு அமைவாக இச்சந்தர்ப்பத்தில் அரச சேவையில்  ஈடுபடுகின்ற பட்டதாரிகளுக்கு அமைவாகவும் தகைமைகளுக்கு அமைவாகவும் விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு கோரப்பட்டிருந்தது. 51000 பேரளவில் அரசசேவையில் தற்போது ஈடுபட்டிருக்கின்ற பட்டதாரிகளிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டிருக்கிறது. 23 ஆம் திகதி பரீட்சை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்  பரீட்ச்சத்திணைக்களம் அதற்கு தேவையான நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விண்ணபிக்கப்பட்டிருந்த பட்டதாரிகளில் 33 பேர் 3 மனுக்களை உச்ச நீதிமன்றிலே மனித உரிமைகள் அடிப்படையிலே தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும்  இந்த பரிட்சை நடாத்துவதற்கு 23 ஆம் திகதி மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட திகதியில் நடத்தாததால் உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால கட்டளை ஒன்று விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த பரீட்சிக்காக 9 வாரங்கள்  கடந்து சென்றுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து உச்ச நீதிமன்றதால்  தீர்மானம் வழங்கப்படும் வரை இந்த அபிவிருத்தி அலுவலர்களை  உள்ளீர்ப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் அல்ல. நீதிமன்றத்திலே முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு துரிதமாக முடிவடைந்த பின்னர் அவர்களை ஆட்ச்சேர்ப்பதற்காக எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது மாகாணத்திலே ஆட்சேர்க்கப்பட்டுள்ள அல்லது அதிலுள்ள மனுதாரருக்கு எந்த விதமான தாக்கங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement