ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ராஜபக்சர்களின் பெருந்தொகை கறுப்பு பணம் உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அத்துடன் வெளிநாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் அதிசொகுசு கார்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் பெயரில்கள் உள்ளன.
கடந்த ஆட்சியின் போது பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு நாட்டை வங்குரோந்து நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவ்வாறான குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நடவடிக்கையை பசில் மேற்கொண்டு வருகிறார்.
அதற்கமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன “சூரிய சந்திரனும் உண்மையையும் மறைக்க முடியாது” என்ற புதிய வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
ராஜபக்சர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஒரு குழுவை நியமிப்பதே அடிப்படை திட்டமாகும்.
பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய பிரதம செயலாளர் சாகர காரியவசவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு 300 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தவும் கட்சி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
நெருங்கும் தேர்தல். ராஜபக்சர்களின் பாரிய மோசடிகளை மூடிமறைக்க திட்டம் போடும் பசில். ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.ராஜபக்சர்களின் பெருந்தொகை கறுப்பு பணம் உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் அதிசொகுசு கார்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் பெயரில்கள் உள்ளன.கடந்த ஆட்சியின் போது பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு நாட்டை வங்குரோந்து நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவ்வாறான குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நடவடிக்கையை பசில் மேற்கொண்டு வருகிறார்.அதற்கமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன “சூரிய சந்திரனும் உண்மையையும் மறைக்க முடியாது” என்ற புதிய வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.ராஜபக்சர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஒரு குழுவை நியமிப்பதே அடிப்படை திட்டமாகும்.பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய பிரதம செயலாளர் சாகர காரியவசவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு 300 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தவும் கட்சி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.