• Mar 26 2026

கிளிநொச்சி மக்களை இழிவுபடுத்திய அர்ச்சனா'பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-கரைச்சி தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன் !

Ziya / Mar 24th 2026, 3:49 pm
image

கிளிநொச்சி மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா, தனது பேச்சுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன்  வலியுறுத்தியுள்ளார்.


கிளிநொச்சியில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.


 நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா, கிளிநொச்சி மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் எனப் பேசியதாக வெளியான கருத்துக்கள் மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் எனவும் சமூக அடையாளங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற அனுப்பி வைக்கப்பட்டவர் இப்படியான மனவேதனை அளிக்கக்கூடிய வகையிலான கருத்துக்களை தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும் அரசியல் விடயங்களை பேசுகின்ற பொழுது மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் பேசுவது நல்ல விடயம்  இதனை விடுத்து ஒரு பிரதேச வாதத்தை தூண்டும் வகையும் கிளிநொச்சி மக்களை பற்றி அவதூறு வார்த்தைகள் பேசுவது அநாகரிகமான செயல் என குறிப்பிட்டார்.


தற்பொழுது கிளிநொச்சி  மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்த கருத்து பேசும் பொருளாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கிளிநொச்சி மக்கள் தற்பொழுது கொந்தளித்து உள்ளனர் 


கிளிநொச்சி மாவட்டத்திற்கு அவ பேரு ஏற்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மக்களின் நன்மதிப்பை பாதிக்கப்படக்கூடிய வகையிலும் கிளிநொச்சி மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் இனி வருகின்ற காலங்களில் இப்படியான மதவாத இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து மக்களின் மனங்களில் வெல்லக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் எனவும் அண்மையில் கிளிநொச்சி மாவட்டமக்களை இழிவு படுத்தக்கூடிய வகையிலான பேசப்பட்ட விடயம் தொடர்பாக   பகிரங்கமாக இராமநாதன் அர்ஜுனா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறித்த ஊடக சந்திப்பின் வாயிலாக தெரிவித்தார்


கிளிநொச்சி மக்களை இழிவுபடுத்திய அர்ச்சனா'பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-கரைச்சி தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன் கிளிநொச்சி மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா, தனது பேச்சுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன்  வலியுறுத்தியுள்ளார்.கிளிநொச்சியில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா, கிளிநொச்சி மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் எனப் பேசியதாக வெளியான கருத்துக்கள் மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் எனவும் சமூக அடையாளங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற அனுப்பி வைக்கப்பட்டவர் இப்படியான மனவேதனை அளிக்கக்கூடிய வகையிலான கருத்துக்களை தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும் அரசியல் விடயங்களை பேசுகின்ற பொழுது மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் பேசுவது நல்ல விடயம்  இதனை விடுத்து ஒரு பிரதேச வாதத்தை தூண்டும் வகையும் கிளிநொச்சி மக்களை பற்றி அவதூறு வார்த்தைகள் பேசுவது அநாகரிகமான செயல் என குறிப்பிட்டார்.தற்பொழுது கிளிநொச்சி  மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தெரிவித்த கருத்து பேசும் பொருளாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கிளிநொச்சி மக்கள் தற்பொழுது கொந்தளித்து உள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அவ பேரு ஏற்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மக்களின் நன்மதிப்பை பாதிக்கப்படக்கூடிய வகையிலும் கிளிநொச்சி மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் இனி வருகின்ற காலங்களில் இப்படியான மதவாத இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து மக்களின் மனங்களில் வெல்லக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் எனவும் அண்மையில் கிளிநொச்சி மாவட்டமக்களை இழிவு படுத்தக்கூடிய வகையிலான பேசப்பட்ட விடயம் தொடர்பாக   பகிரங்கமாக இராமநாதன் அர்ஜுனா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறித்த ஊடக சந்திப்பின் வாயிலாக தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement