• Feb 16 2026

மணப்பெண்ணை சுவிஸிற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள்? அவரை அழைத்து வாருங்கள் - முஜிபுர் ரஹ்மான் ஆவேசம்!

shanuja / Jan 22nd 2026, 2:03 pm
image

திருமணபந்தலை போட்டுவிட்டு மணப்பெண்ணை சுவிஸ்சர்லாந்திற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள். அவரை அழைத்து வந்தால் தான் சரியாக வினவி திருமணத்தை நடத்தலாம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


தற்போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பலவாறான சர்ச்சைகள் பல பரப்பிலும் ஏற்பட்டுள்ளன. 6ஆம் தர மொடியுலில் நிகழ்ந்த சீர்கேடுகளுக்கு பதில் கூறுங்கள். 


நாட்டில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சர்ச்சை நிகழ்ந்து கொண்டுள்ள போது அதற்கான தீர்வு, நடவடிக்கைகள் எடுக்காமல்  உள்ளீர்கள். 


கல்வி மறுசீரமைப்பு விவாதம் இடம்பெறவேண்டுமெனில் பிரதமர் கட்டாயம் இங்கிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரை அனுப்பிவிட்டு இங்கு விவாதத்தை மேற்கொள்ள நினைக்கிறீர்கள். இது அவரைக் காப்பாற்றும் முயற்சியாகும். 


இது எவ்வாறு உள்ளதெனில் ஒரு திருமணத்தை நடத்துவதற்கு திருமண பந்தலை போட்டுவிட்டு அனைத்தையும் தயார் செய்த பின்னர் மணப்பெண்ணை சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பியுள்ளீர்கள். 


மணப்பெண் இருந்தால் தானே திருமணம் நடத்தலாம். மணப்பெண் இல்லாமல் திருமண பந்தலும் அதற்கான ஏற்பாடுகளும் எதற்கு? ஆகவே மணப்பெண்ணை அழைத்து வாருங்கள் என்றார். 


அதாவது கல்வி மறுசீரமைப்பு விவாதத்திற்கும் அதற்கான தீர்வுகளை முன்னெடுக்கவும் பிரதமர் வேண்டும் என்பதற்காக இவ்வாறு சாடியுள்ளார்.

மணப்பெண்ணை சுவிஸிற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள் அவரை அழைத்து வாருங்கள் - முஜிபுர் ரஹ்மான் ஆவேசம் திருமணபந்தலை போட்டுவிட்டு மணப்பெண்ணை சுவிஸ்சர்லாந்திற்கு அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்த நினைக்கிறீர்கள். அவரை அழைத்து வந்தால் தான் சரியாக வினவி திருமணத்தை நடத்தலாம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பலவாறான சர்ச்சைகள் பல பரப்பிலும் ஏற்பட்டுள்ளன. 6ஆம் தர மொடியுலில் நிகழ்ந்த சீர்கேடுகளுக்கு பதில் கூறுங்கள். நாட்டில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சர்ச்சை நிகழ்ந்து கொண்டுள்ள போது அதற்கான தீர்வு, நடவடிக்கைகள் எடுக்காமல்  உள்ளீர்கள். கல்வி மறுசீரமைப்பு விவாதம் இடம்பெறவேண்டுமெனில் பிரதமர் கட்டாயம் இங்கிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரை அனுப்பிவிட்டு இங்கு விவாதத்தை மேற்கொள்ள நினைக்கிறீர்கள். இது அவரைக் காப்பாற்றும் முயற்சியாகும். இது எவ்வாறு உள்ளதெனில் ஒரு திருமணத்தை நடத்துவதற்கு திருமண பந்தலை போட்டுவிட்டு அனைத்தையும் தயார் செய்த பின்னர் மணப்பெண்ணை சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பியுள்ளீர்கள். மணப்பெண் இருந்தால் தானே திருமணம் நடத்தலாம். மணப்பெண் இல்லாமல் திருமண பந்தலும் அதற்கான ஏற்பாடுகளும் எதற்கு ஆகவே மணப்பெண்ணை அழைத்து வாருங்கள் என்றார். அதாவது கல்வி மறுசீரமைப்பு விவாதத்திற்கும் அதற்கான தீர்வுகளை முன்னெடுக்கவும் பிரதமர் வேண்டும் என்பதற்காக இவ்வாறு சாடியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement