• Mar 31 2025

நீதிமன்றில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி - பிடியாணை இரத்து!

Chithra / Nov 28th 2024, 3:55 pm
image

  

வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

அவர் சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டிருந்தார்.

2021ஆம் ஆண்டு பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி - பிடியாணை இரத்து   வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.அவர் சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவரை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டிருந்தார்.2021ஆம் ஆண்டு பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement