யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு, காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்டச் செயலர், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இருந்து 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன..
அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.
இந்த நிலங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைப் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணங்கிய இராணுவம். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு, காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்டச் செயலர், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இருந்து 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.இந்த நிலங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைப் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.