பல கோரிக்கைகளின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் நிலையில் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க படையினர் இராணுவத் தளபதியினால் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தற்போது, கண்டி, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை, பேராதெனிய, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், வட்டவளை, கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, அம்பேவெல, புத்தளம், சிலாபம், மாதம்பே, நாத்தாண்டிய, அலவ்வ, பொல்கஹவெல, குருநாகல், மஹவ ஆகிய ரயில் நிலையங்கள் உட்பட 45 ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையங்க தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் பணியமர்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
45 ரயில் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ரயில் நிலைய அதிபர்களுக்கு இறுதி எச்சரிக்கை பல கோரிக்கைகளின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் நிலையில் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க படையினர் இராணுவத் தளபதியினால் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள் பணிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது, கண்டி, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை, பேராதெனிய, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், வட்டவளை, கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, அம்பேவெல, புத்தளம், சிலாபம், மாதம்பே, நாத்தாண்டிய, அலவ்வ, பொல்கஹவெல, குருநாகல், மஹவ ஆகிய ரயில் நிலையங்கள் உட்பட 45 ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையங்க தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் பணியமர்தப்பட்டுள்ளனர்.இதேவேளை இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.